கோவை மனம் (776-800)
கோவை மனம் 776. எதிரிகளும், தோல்விகளும் கொண்டவனுக்கு அனுபவம் தானாக வருமே அன்றி ஆசிரியர் சொல்லி வருவதல்ல. கோவை மனம் 777. வானத்தில் பறந்தாலும், தரையில் இறங்கவும் இருக்கவும் கற்றுக்கொள். சிறகுகள் இழந்தாலும் வருத்தம் கொள்ள மாட்டாய். கோவை மனம் 778. விடியலில்தான் சேவல் கூவும் என்பதில்லை, பசித்தாலும் கூவும். கோவை மனம் 779. மேகம், திங்களை மறைத்தாலும் ஒளிக்கதிர் உமிழ்வதில் மாற்றம் இருக்காது. அதுபோல், அறமுடையார் வினைவயின் மறைந்திருந்தாலும் அறமுடையோர் அறமுடையோரே. கோவை மனம் 780. அறமுடையோர் வினைப்பயனால் அவர் பொருட்டு தீவினை செய்தாலும், பிறர் பொருட்டு நல்வினையாக அமையும். கோவை மனம் 781. ஆசை கொண்டவன் சவமாகவும், ஆசை அற்றவன் மனிதனாகவும் இருப்பான். கோவை மனம் 782. தவறு செய்தவனை மன்னித்துவிடு. ஆனால், துரோகம் செய்தவனை மன்னிக்காதே. கோவை மனம் 783. ...