கோவை மனம் (701-725)
கோவை மனம் 701. எரிச்சலூட்டும் பேச்சானாலும் உற்றுப்பார் சிலவேணும் உண்மை இருக்கும்.
கோவை
மனம் 702. பார்வையின் கோணங்கள் மாறுபட்டாலும்
அவற்றின் பிம்பங்கள் மாற்ற முடியாதவை.
கோவை
மனம் 703. பிறப்பு உருவாக்கப்படுவது. ஆனால், இறப்பு தவிர்க்க முடியாதது.
கோவை
மனம் 704. தெரியாத தொழிலைச் செய்து இழப்படைவதை
விட, தெரிந்த தொழிலில் இழப்படைந்தால் முன்னேற வழி பிறக்கும்.
கோவை
மனம் 705. மற்றவர்களை மகிழ்விக்க முடியாவிட்டாலும்
அவர்களின் எண்ணங்களை அழிக்காதே.
கோவை
மனம் 706. தன் குறைகளைச் சொல்வதற்குத் தகுந்தவர்
இல்லாத போதுதான் தன்னையும் மீறிய சக்தி மீது நாட்டம் கொள்கிறான்.
கோவை
மனம் 707. மற்றவர் குறைகளைக் களையாவிட்டாலும்,
மிகுதிப்படுத்தாதே.
கோவை
மனம் 708. சொல்வதெல்லாம் உண்மையல்ல, பார்ப்பதெல்லாம்
நம்பத் தகுந்ததும் அல்ல. அனுபவிப்பதே உறுதியானது.
கோவை
மனம் 709. ஒருவனுடைய செயற்பாடுகளே அவனுடைய
வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
கோவை
மனம் 710. காயப்படுத்துவர்களை எண்ணாமல் இரு, உன் மனவலிகள் தானாய்க் குறையும்.
கோவை
மனம் 711. மற்றவர்களைப் பேசும் சபையில்,
நீ விலகியதும் நீயும் பேசும் பொருளாவாய்.
கோவை
மனம் 712. உன்னுடைய குற்றத்திற்கு எதிர்பாராத
நேரத்தில் தண்டனையும், நீ செய்த நன்மைக்கு உற்ற நேரத்தில் உதவியும் கிடைக்கும்.
கோவை
மனம் 713. நேர்மையாக இருந்தால் நிறைய நண்பர்களைப்
பெறமுடியாது. என்றாலும், சிறந்தவர்களை நண்பர்களாகப்
பெறுவீர்.
கோவை
மனம் 714. எவ்வளவு நெருங்கிய பழக்கமானாலும்,
ஒரு சிறு செயலே அவர்களுக்கு நாம் எதிரியாகிவிடுவோம்.
கோவை
மனம் 715. குறையற்ற உதவி செய். குறை கண்டால் நிறை போகும்.
கோவை
மனம் 716. வேதனையின் வெளிப்பாடே கோபம்.
கோவை
மனம் 717. உனக்காகக் கண்ணீர் விடுபவர்களே
உண்மையானர்கள்.
கோவை
மனம் 718. யாரையும் சார்ந்து வாழாதே. உன்னையே
நம்பி வாழ்.
கோவை
மனம் 719. மௌனமும் புன்னகையும் தனிமையும்
உன் துன்பங்களைப் போக்கும் கருவிகள்.
கோவை
மனம் 720. ஒருவரை ஒருவர் அடக்குவது வாழ்க்கை
அல்ல, அடங்குவதே வாழ்க்கை.
கோவை மனம் 721. உயிர்
பிரிந்தால் மட்டுமல்ல, பிடித்தவர் விலகும் ஒவ்வொரு நொடியும் மரணம்தான்.
கோவை
மனம் 722. அன்பைப் பார்த்து அன்பு கொள்.
அதுவே நிலைத்து நிற்கும்.
கோவை மனம் 723. மனம்
முடிக்கும் வரையல்ல, மரணம் வரும் வரை நேசிப்பதுதான் உண்மையான காதல்.
கோவை
மனம் 724. அடுத்தவர் துன்பத்தில் கடுகளவும்
இன்பம் காணாதே. எதிர்காலத்தில் சிறிய துன்பமும்
கடலளவாய்த் தோன்றும்.
கோவை
மனம் 725. மரணம் மட்டுமே மனிதன் பொறாமைப்படாதது.
கருத்துகள்
கருத்துரையிடுக