கோவை மனம் (726-750)

 கோவை மனம் 726.      ஒதுக்கப்படும் இடத்திலிருந்து, காரணம் கேட்காமல் நீயாக ஒதுங்கிவிடு.

கோவை மனம் 727.      மருத்துவத்தைவிட ஆறுதலே சிறந்த மருந்து.

கோவை மனம் 728.      நல்ல நட்பு, துன்பத்தைப் பாதியாகவும் இன்பத்தை இரட்டிப்பாகவும் ஆக்கும்.

கோவை மனம் 729.      நீ, கண்ணீரோடு கலங்கி நிற்கும் போதுதான் உன் எதிரில் இருப்பவர்கள் யார் என்று புரியும்.

கோவை மனம் 730.      துரோகம் ஒன்றே மன்னிக்க முடியாதது.

கோவை மனம் 731.      தன்னுடைய  தேவை எது என்று அறியாதவனால் மட்டுமே பிறரின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

கோவை மனம் 732.      தனது வாழ்க்கையில் மன நிறைவு கொள்ளாதவனே, பிறரின் குறைகளைக் கூறி பெருமை கொள்வான்.

கோவை மனம் 733.      உறவாடாத உறவுகளுடன் உறவு கொள்ளாதே.

கோவை மனம் 734.      உரிமையே இருந்தாலும் மதிப்பில்லை என்றால் விலகுதல் சார்பு.

கோவை மனம் 735.      எதையும் உன்னுடைய நல்ல மனம் ஏற்றுக் கொண்டாலும், அங்குத் தன்மானம் விலைபோகுமாயின் இருக்காதே.

கோவை மனம் 736.      ஆசையினால் வரும் ஏமாற்றத்தை விட, நம்பிக்கையில் வரும் ஏமாற்றமே மிகப்பெரியது.

கோவை மனம் 737.      அவமதிப்பே முதுமையின் முதல் அடையாளம்.

கோவை மனம் 738.      பேச வேண்டிய இடத்தில் பேசாமலும், பேச வேண்டியதைப் பேசாமலும் இருப்பது மரணத்தைவிட கொடுமை.

கோவை மனம் 739.      நமக்கு யாரும் இல்லை என்றபோது ஏற்படுகிற வலியைவிட, எல்லோரும் இருந்தும் நமக்காக யாரும் பேசவில்லை என்றபோதுதான் வலி அதிகமாகும்.

கோவை மனம் 740.      உண்மையான அன்பு உன்னிடம் பேச நேரத்தை உருவாக்கும்.  அதுவே, பொய்யான அன்பு உன்னிடம் பேசாமல் இருப்பதற்குக் காரணத்தைத் தேடும்.

கோவை மனம் 741.      பணக்காரன் பணத்தையும், பைத்தியக்காரன் பாசத்தையும் சேர்ப்பான்.

கோவை மனம் 742.      முயற்சித்தால் மட்டுமே வெற்றியின் பயண தூரம் குறையும்.

கோவை மனம் 743.      மனைவியிடம் தன்மானம் காட்டாதே.

கோவை மனம் 744.      எந்த இடத்தையும் வேண்டி விரும்பிப் பெறலாம்.  ஆனால், நீ வந்த கருவறை மட்டும் மீண்டும் உனக்குக் கிடைக்காது.

கோவை மனம் 745.      ஒரு ஆணின் கோபம், தனக்குப் பிடித்த பெண்ணிடம் தோற்கும்.

கோவை மனம் 746.      உன்னுடைய சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்காத உறவுகளை நாடாதே.

கோவை மனம் 747.      உன்மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளவர்களை மட்டுமே உன்னால் எளிதில் ஏமாற்ற முடியும்.

கோவை மனம் 748.      வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார். தோல்வியின் விளிம்பில் வெற்றிக்கான ஒளி தெரியும்.

கோவை மனம் 749.      குறிக்கோள் வாழ்க்கை கோலோச்சும்.

கோவை மனம் 750.      சொல்லக் கூடாத உண்மையினைச் சொன்னவரிடமும் சொல்லாதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவை மனம் (701-725)

கோவை மனம் (751-775)