கோவை மனம் (751-775)

 கோவை மனம் 751.      மெய்யை மெய்யாக்கி, மனதை மணமாக்கு.

கோவை மனம் 752.      தோல்வியின் விளிம்பில் கிடைத்த வெற்றி வரலாறாகும்.

கோவை மனம் 753.      மக்களால் ஏற்கப்பெற்ற எவையும், காலங் கடந்தும் வாழும்.

கோவை மனம் 754.      குற்றமுள்ள நெஞ்சு, உண்மையையும் பொய்யாகவே பார்க்கும்.

கோவை மனம் 755.      வறுமையையும் வளமாகப் பார்ப்பவன் மாமனிதன்.

கோவை மனம் 756.      இயல்பாகத் தோன்றும் படைப்பைவிட, அனுபவப் படைப்பே சாலச் சிறந்தது.

கோவை மனம் 757.      படிப்பவனின் உணர்வை மதிக்கத் தெரிந்தவனே சிறந்த படைப்பாளி.

கோவை  மனம் 758.     சொற்களுக்குள் அடங்காத அனுபவத்தை அனுபவித்தே உணர்.

கோவை மனம் 759.      செயற்பாட்டோடு கூடிய கவிஞனின் கவிதை நிலை கொள்ளும்.

கோவை மனம் 760.      பெரும்பான்மையோர் இரசிக்காத ஒன்றை இரசிப்பவனே கலைஞன்.

கோவை மனம் 761.      பெண்ணைப் பற்றிக் கவிதை எழுதும்போது, உண்மையை மறைத்து எழுது. கவிதை சிறக்கும்.

கோவை மனம் 762.      கணவனின் குறைகளை மனைவியோ, மனைவியின் குறைகளைக் கணவனோ பிறரிடம் கூறக் கூடாது. கூறினால் உங்களின் வாழ்க்கையைக் கசக்கச் செய்வர்.

கோவை மனம் 763.      மன்னிப்பு கிடைக்கிறது என்பதற்காக தவறுகள் செய்யாதே.  அந்த மன்னிப்பும் எல்லை மீறும்போது கண்டிப்பாக மாறும்.

கோவை 764.       கோயிலைக் கூட்டிச் சுத்தம் செய்து புண்ணியம் தேடினாலும், மனக்கோயிலைக் கூட்டாது விட்டால் எந்தப் பலனும் இல்லை.

கோவை மனம் 765.      நல்லதை இணைந்து செய். ஆனால், கெட்டதை தனித்தே செய்.

கோவை மனம் 766.      எல்லாம் தெரிந்திருந்தாலும் சில இடங்களில் எதுவும் தெரியாதவன் போல் நடித்துப்பார், வாழ்க்கை உனக்கு நிறைய பாடம் புகட்டும்.

கோவை மனம் 767.      புணர்வதால் வருவதல்ல காதல், புரிதலில் மலர்வதே காதல்.

கோவை மனம் 768.      உள்ளம் உருக இறைவனை நினைத்தால் கடந்து போகலாம். ஆனால், உள்ளம் உருகிக் கேடு நினைத்தால் உறைந்து போவீர்.

கோவை மனம் 769.      உண்டிப் பணம் தேவைக்கு உதவுவதுபோல், செய்த அறம் தேவைக்கு உதவி செய்யும்.

கோவை மனம் 770.      உழைப்பின் வேர்கள் கசப்பானது என்றாலும் கனிகள் இனிக்கவே செய்யும்.

கோவை மனம் 771. தூய்மையான மனதில் மகிழ்ச்சி நிழலைப் போலத் தொடரும்.

கோவை மனம் 772.      முறன்பாடுகளைக் கூட இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை வசந்தமாகும்.

கோவை மனம் 773.      குத்திக் காட்டுபவர்களுக்கும் சுட்டிக் காட்டுபவர்களுக்கும் இடையில் சுகமாக சிரித்துக் கொண்டு வாழ்வதுதான் சவாலான வாழ்க்கை.

கோவை மனம் 774.      சகுனிகள் நிறைந்த உலகில் சத்தியத்தோடு கொஞ்சம் சாணக்கியமும் கலந்து இருப்பதே நல்லது.

கோவை மனம் 775.      மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்பதை விட எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவை மனம் (701-725)

கோவை மனம் (626-650)