கோவை மனம் (651-675)
கோவை மனம் 651. தொடர் பணியானாலும் முறைமாறினால் பணியாற்ற முடியாது.
கோவை
மனம் 652. வளர்ந்த மரம் தனக்குக் கீழ் மற்றொரு
மரத்தை வளர விடாது. வளர்த்தால் அது போதி மரமாக
இருக்கும்.
கோவை
மனம் 653. உலகம் வாழட்டும் என்பவன், தானும்
இவ்வுலகத்தில் வாழுகின்றோம் என்பதை மறப்பதில்லை.
ஆனால், தான் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்பவன் உலகத்தவர் வாழ்க்கை பற்றிக்
கவலைப்படுவதில்லை.
கோவை
மனம் 654. எவனொருவன் ஒன்றைக் கேலி பேசுகின்றானோ
அவனே அந்தக் கேலியின் உட்பொருளாய் இருப்பான் என்பதை மனதில் கொள்.
கோவை
மனம் 655. பிறர் குற்றத்திற்குத் தண்டனை
ஏற்பவன் வாழ்க்கையில் உயர்வான். தன் குற்றத்தைப்
பிறருக்கு வழங்குபவன் வாழ்க்கையில் தாழ்வான்.
கோவை
மனம் 656. உயிரைவிட உணர்வு முக்கியம்.
கோவை
மனம் 657. இழந்தவனுக்கே இழப்பின் வலி தெரியும்.
கோவை
மனம் 658. தொட்டியில் கீறல் கசிவைக் காட்டும்.
கோவை
மனம் 659. கற்பனையைக் கற்பனையாகவே பார்க்கும்போது
சுவை தெரியாது. அந்தக் கற்பனையை அனுபவித்துப்
பார் அதன் சுவையை உணர முடியும்.
கோவை
மனம் 660. காதலை அளந்தவன், காமத்தையும்
அளந்தால் காலம் கடந்தும் வாழ்வான்.
கோவை
மனம் 661. எந்தச் சூழலிலும் நேர்மையை இழக்காதவன்
உன்னத மனிதன்.
கோவை
மனம் 662. கடல்நீர் உப்புதான். அதற்காக, உப்பிற்குக் கடல்நீரைப் பயன்படுத்துவது
இல்லை. எதற்கும் பக்குவம் வேண்டும்.
கோவை
மனம் 663. ஒன்றைப் பற்றி முடிவெடுப்பதற்கு
முன், உன் மனதோடு பேசிப் பார். நல்ல முடிவு
கிட்டும்.
கோவை
மனம் 664. ஒன்றைப் பற்றி நீ சிந்தித்துக்
கொண்டு இருக்கும் போது இடையில் எழும் வினாக்களுக்கு விடை பகராதே. மௌனமாய் இருப்பதே நல்லது.
கோவை
மனம் 665. எதையும் செய்தவற்கு முன் ஒரு
முறை உன் மனதோடு பேசிப்பார், எல்லாம் நல்லதாய் முடியும்.
கோவை
மனம் 666. தன்னைப் பற்றியே சிந்திப்பவன்
பொதுநலத்தில் நாட்டம் இல்லாதவன். பொதுநலத்தில்
நாட்டம் உள்ளவன் தன்னைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
கோவை
மனம் 667. மற்றவரின் துன்பத்தில் பங்கு
பெறும்போது தன்னுடைய துன்பங்கள் பெரியதாகத் தெரிவதில்லை.
கோவை
மனம் 668. இகழும் போதும் புகழும் போதும்
எவன் ஒருவன் சமநிலை எய்துகின்றானோ அவனே மனிதன்.
கோவை
மனம் 669. அம்மி, மிதித்தாலும் அரைத்தாலும்
அழகுதான்.
கோவை
மனம் 670. குற்றஞ் செய்தவனுக்குக் கிடைத்த
தண்டனையால் அவன் திருந்துவதில்லை. குற்றஞ்
செய்யாதவனுக்குக் கிடைத்த தண்டனையால் அவன் மனிதனாகின்றான்.
கோவை
மனம் 671. உறவில் இல்லை என்றாலும், உள்ளத்தால்
வாழ்வதே உயர்ந்த காதல்.
கோவை
மனம் 672. உன்னை நீ மறைத்துக் கொண்டாலும்,
உன்னுடைய செயற்பாடுகள் மறைந்துவிடுவதில்லை.
கோவை
மனம் 673. உனது திறமையும் நேர்மையும் வெளிப்படும்
போது எதிரியும் உன்னை மதிப்பான்.
கோவை
மனம் 674. யாரையும் ஏமாற்றிப் பிழைக்கும்
பழக்கம் இல்லாதவன் என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்பான்.
கோவை
மனம் 675. ஒழுக்கம், உழைப்பு, பண்பு, நேர
மேலாண்மையைக் குழந்தையிலேயே பழக்கப்படுத்தினால் நாளடைவில் அவனே மாமனிதன்.
கருத்துகள்
கருத்துரையிடுக