கோவை மனம் (601-625)
கோவை மனம் 601. ஒருவருடைய குணம், சொல்லில் இல்லை. செயலிலேயே தெரியும்.
கோவை
மனம் 602. ஆண் பிள்ளை வாரிசு என்றால், பெண்
பிள்ளை உனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.
கோவை
மனம் 603. தன் மனைவியும் – அம்மாவும் சிரித்துப்
பேசினால்தான் ஆணின் மகிழ்ச்சி நிலைக்கும்.
கோவை
மனம் 604. மெட்டி தேய தேயக் குடும்பத்தில்
மகிழ்ச்சியும் தேயும்.
கோவை
மனம் 605. அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும்
அழிந்ததில்லை. ஆனால், அன்பை வைத்து ஏமாற்றியவர்கள்
இறுதி வரை நன்றாக வாழ்ந்ததில்லை.
கோவை
மனம் 606. புறம் பேசுபவர்களின் சொற்களைப்
புறந்தள்ளிவிட்டு, உன் மனம் சொல்லும் வழியில் முன்னேறு.
கோவை
மனம் 607. அடுத்தவரைப் போல் நாம் வாழ வேண்டும்
என்று நினைப்பதைவிட, மற்றவர்கள் நம்மைப்போல் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டு.
கோவை
மனம் 608. தொடக்கத்தில் நல்லவை நரகமாகவும்,
தீயவை சொர்க்கமாகவும் தெரியும்.
கோவை
மனம் 609. நீ நல்லவனா, கெட்டவனா என்பதைவிட
உன்னை நம்புபவர்களுக்கு உண்மையாக இரு.
கோவை
மனம் 610. வலி, கண்ணீர், தனிமை தந்தவரிடம்
உறவு கொள்ளாதே.
கோவை
மனம் 611. வெளிச்சம் வேறுவேறு நிறங்களில்
இருந்தாலும் இருள் மட்டும் ஒரே நிறமாக இருக்கும்.
கோவை
மனம் 612. பசித்த போது கிடைக்காத உணவும்,
பதறிய போது உதவாத உறவும் பாழ்.
கோவை
மனம் 613. நினைத்த போது அருகில் இருப்பவர்களைவிட
உன் அருகில் இல்லாத போதும் உன்னை நினைத்துக் கொண்டிருப்பவர்களே உண்மையான உறவுகள்.
கோவை
மனம் 614. உளி படாத கல் சிலையாவது இல்லை. வலி இல்லாத வாழ்க்கை வளம் ஆவதில்லை.
கோவை
மனம் 615. உதிரும் இலைகளால் மரம் வருத்தப்பட்டதே
இல்லை. மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கை. அதுபோல், மனிதர்களுக்கும் இலையுதிர் காலம் உண்டு.
கோவை
மனம் 616. உண்மை கசக்குமே என மறைக்காதே. அதனால் உன் வாழ்க்கையே கசப்பாகும்.
கோவை
மனம் 617. பணம் இல்லாத ஏழையாக சில நாட்கள்
பழகிப் பார். உண்மையான உறவை அறிவாய்.
கோவை
மனம் 618. பலரது உதாசீனமும் சிலரது துரோகங்களுமே
உன்னைச் செதுக்கிக் கொள்ளும் உளி.
கோவை
மனம் 619. நாம் ஒதுங்கி நின்றால், சிலருக்கு
நன்மை கிடைக்கும் என்றால், நாம் ஒதுங்கிக் கொள்வதில் தவறில்லை.
கோவை
மனம் 620. ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரை
விட, அவர்களை இழக்கக் கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு வலியும் வலிமையும்
அதிகம்.
கோவை
மனம் 621. துரோகிகளையும் துரோகங்களையும்
எப்பொழுதும் மறக்காதே. அப்பொழுதுதான் மீண்டும்
நீ ஏமாறாமல் விழிப்பாய் இருப்பாய்.
கோவை
மனம் 622. கோபுரமும் கலசமும் வேறுவேறென்றாலும்
கோபுரத்தின் மேல் இருக்கும் கலசத்திற்கு மதிப்பு அதிகம்.
கோவை
மனம் 623. தன்னுடைய தவறை உணர்ந்தவன் திருந்துவான்.
ஆனால், தவறை உறுதிப்படுத்துபவன் என்றுமே திருந்த மாட்டான்.
கோவை
மனம் 624. மற்றவர்களால் தேடப்படும் வரையே
நீ மதிக்கப்படுவாய்.
கோவை
மனம் 625. சோகமாய் வாழ்ந்தாலும் நெருப்பாய்
இரு. அப்பொழுதுதான் நீ யாருக்கும் அடிமையாகமாட்டாய்.
கருத்துகள்
கருத்துரையிடுக