கோவை மனம் (626-650)
கோவை மனம் 626. உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடு. வாழ்க்கை உன்னுடையதாக இருக்கும்.
கோவை
மனம் 627. போலியான வாழ்க்கைக்குக் கிடைக்கும்
பரிசும் பாராட்டும் நிலையற்றவை.
கோவை
மனம் 628. வெற்றி அடையும் முன் கொண்டாடாதே. அது ஒரு சிறு நொடிப்பொழுதில் உன் வாழ்க்கையை மாற்றும்.
கோவை
மனம் 629. தேவையற்றவற்றை மறந்து போவதும் கடந்து செல்வதுமாக இருந்தாலே ஆறுதலான
வாழ்க்கை கிடைக்கும்.
கோவை
மனம் 630. திரை வாழ்க்கை வேறு. உண்மை வாழ்க்கை
வேறு என்பதை உணர். இரண்டையும் ஒப்பிட்டுப்
பார்க்காதே.
கோவை
மனம் 631. பேசியவை மட்டுமல்ல பேசாத மௌனங்களும்
வலியைத் தரும்.
கோவை
மனம் 632. நாம் வாழ்கின்ற நாட்களில் நமக்காக
வருத்தப்படுவதை விட பிறருக்காக வருத்தப்படுபவனே மக்களால் போற்றப்படுவான்.
கோவை
மனம் 633. துணைக்கு ஒருவரும் இல்லாதபோது
வாழ்க்கையே கசக்கும்.
கோவை
மனம் 634. உழைத்தால் மட்டுமே வாழ்க்கையில்
மாற்றம் வரும்.
கோவை
மனம் 635. ஒவ்வொரு செயலின் எதிர்ப்பிலும்
உன்னுடைய வளர்ச்சியின் பங்கு உண்டு.
கோவை மனம் 636. தான்
எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறே மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சிறந்தது.
கோவை
மனம் 637. கடந்த காலம் எப்படி இருந்தாலும் நிகழ்காலத்தில் மீள் பார்வை இருந்தால்
எதிர்காலம் உனதாகும்.
கோவை
மனம் 638. எதிரியை நண்பனாக்க முயற்சி செய். நண்பனை எதிரியாக்கிக் கொள்ளாதே.
கோவை
மனம் 639. ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்பவே
அவனுடைய முதிர்ச்சி அமைந்திருக்கும்.
கோவை
மனம் 640. கொடுக்கும் வரையே கொண்டாட்டம். கொடுத்ததை எடுத்தால் திண்டாட்டம்.
கோவை
மனம் 641. உன்னுடைய உள்ளுணர்வு ஊருக்காக
அல்ல, உனக்கானது என்பதை உணர்.
கோவை
மனம் 642. உன்னையே நீ நம்பு. நம்பிடாத போழ்து,
பிறரின் உன்னதமான உண்மையை நம்பு.
கோவை
மனம் 643. அடிபடும் போதுதான் அறிவு வரும்.
கோவை
மனம் 644. பிடிபடும் போதுதான் திருடு புரியும்.
கோவை
மனம் 645. கடிபடும் போதுதான் வலி தெரியும்.
கோவை
மனம் 646. விடியும் போதுதான் உண்மை தெரியும்.
கோவை
மனம் 647. பணியும் போதுதான் பண்பு தெரியும்.
கோவை
மனம் 648. குனியும் போதுதான் உண்மை புரியும்.
கோவை
மனம் 649. துணியும் போதுதான் காரியம் முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக