கோவை மனம் (676-700)
கோவை மனம் 676. காதலிக்குக் கொடுக்கும் அன்பும், தங்கைக்குக் கொடுக்கும் பாதுகாப்பும், தாய்க்குக் கொடுக்கும் மதிப்பும் மனைவிக்குக் கொடுத்துப் பார் அவளுடைய உன்னத அன்பு உன்னையே சுற்றி இருக்கும்.
கோவை மனம் 677. ஏமாற்றுவதை விட தோற்றுப் போவதே சிறந்தது. கோவை மனம் 678. போட்டியும் பொறாமையும் போலிச் சிரிப்பும் நிறைந்த உலகத்தில் உனக்குத் துணையாக கடைசி வரை வருவது நீ பழுதறக் கற்ற கல்வியே.
கோவை
மனம் 679. எதிரிகள் கொடுக்கும் வலியை விட
உறவுகள் கொடுக்கும் வலியே கொடுமையானது.
கோவை
மனம் 680. எல்லோரிடமும் உண்மையாக இருப்பவனுக்குத்
தனிமையே நிரந்தரம்.
கோவை
மனம் 681. நம் உணர்வுகளை மதிக்காத உறவுகளை
ஏற்காதே.
கோவை
மனம் 682. நல்ல மனைவி அமைந்தால் வறுமையிலும்
துன்பம் தெரியாது.
கோவை
மனம் 683. நல்ல மனைவி அமையாவிட்டால் எவ்வளவு
வசதி இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.
கோவை
மனம் 684. உன்னுடைய எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும்
மதிப்பளிப்பவளே சிறந்த மனைவி.
கோவை
மனம் 685. மதியாதார் அழைப்பை ஒருபோதும்
ஏற்காதே.
கோவை
மனம் 686. பிறர் உன்னைச் சுமையாக நினைக்காமல்
வாழ்.
கோவை
மனம் 687. உன்னைச் சுமையாக நினைப்பவரிடம்
தூர இரு.
கோவை
மனம் 688. ஒருவரைப் பற்றி நன்றாகப் புரிந்து
கொள்வதற்கு முன் ஊமையாக இரு.
கோவை
மனம் 689. ஒருவரைப் பற்றி நீ என்ன மதிப்பிடுகிறாயோ,
அதிலிருந்து பாதி குறைத்தே மதிப்பிட்டு. மீதியை எதிர்காலத்தில் மதிப்பிடு.
கோவை
மனம் 690. அதிக நெருக்கம் பிரிவுக்கு வழி
கொடுக்கும்.
கோவை
மனம் 691. எளிதில் ஒருவனை நம்பாதே. நம்பிவிட்டால்
பிரியாதே.
கோவை
மனம் 692. உண்மை காப்பாற்றப்படுவதற்காகச்
சொல்லும் பொய்கள் நம்பக் கூடியதாக இருக்க வேண்டும்.
கோவை
மனம் 693. வாயளவில் பேசும் பேச்செல்லாம்
பொய்ப் பேச்சாகவே இருக்கும்.
கோவை
மனம் 694. ஒரு செயலைச் செய்யத் துணிந்துவிட்டால்,
தனிமையானாலும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
கோவை
மனம் 695. காப்பாற்றப்பட வேண்டிய இரகசியத்தையும்
உண்மையானவரிடம் சொல்லுவதில் தவறில்லை.
கோவை
மனம் 696. உன்னைத் துன்பப்படுத்தியவருக்குத்
துன்பம் கொடுக்காதே. அவரே தனது தவறை உணரும் வகையில் நீ நடந்து கொள்.
கோவை
மனம் 697. உன்னுடைய இரக்கக் குணத்தைப் பயன்படுத்தி
உன்னை ஏமாற்றுபவரிடமிருந்து விலகி இரு.
கோவை
மனம் 698. உன்னுடைய உயிரைப் பற்றி நினைக்காத
வரை இரக்கம் உன்னிடம் உயிர்பெற்று இருக்கும்.
கோவை
மனம் 699. கணவன்-மனைவிக்குள்ள மன வேறுபாட்டை
அவர்களாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக