கோவை மனம் (776-800)
கோவை மனம் 776. எதிரிகளும், தோல்விகளும் கொண்டவனுக்கு அனுபவம் தானாக வருமே அன்றி ஆசிரியர் சொல்லி வருவதல்ல.
கோவை
மனம் 777. வானத்தில்
பறந்தாலும், தரையில் இறங்கவும் இருக்கவும் கற்றுக்கொள். சிறகுகள் இழந்தாலும் வருத்தம் கொள்ள மாட்டாய்.
கோவை
மனம் 778. விடியலில்தான் சேவல் கூவும் என்பதில்லை,
பசித்தாலும் கூவும்.
கோவை
மனம் 779. மேகம், திங்களை மறைத்தாலும் ஒளிக்கதிர்
உமிழ்வதில் மாற்றம் இருக்காது. அதுபோல், அறமுடையார் வினைவயின் மறைந்திருந்தாலும் அறமுடையோர் அறமுடையோரே.
கோவை மனம் 780. அறமுடையோர் வினைப்பயனால் அவர் பொருட்டு தீவினை
செய்தாலும், பிறர் பொருட்டு நல்வினையாக அமையும்.
கோவை மனம் 781. ஆசை கொண்டவன் சவமாகவும், ஆசை அற்றவன் மனிதனாகவும்
இருப்பான்.
கோவை மனம் 782. தவறு செய்தவனை மன்னித்துவிடு. ஆனால், துரோகம் செய்தவனை மன்னிக்காதே.
கோவை மனம் 783. சில நேரங்களில் குருடாகவும், செவிடாகவும், ஊமையாகவும்
இருக்கக் கற்றுக்கொள். மனம் அமைதி பெறும்.
கோவை
மனம் 784. கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்டதே
வாழ்க்கை.
கோவை
மனம் 785. உண்மையான பாசம் இருந்தால், நீ
விலகி இருந்தாலும் உன்னைத் தேடி வரும்.
கோவை
மனம் 786. உயிர் அடங்கிவிட்டால் உடலுக்கும்,
உடல் படுத்துவிட்டால் உயிருக்கும் மதிப்பு இருக்காது.
கோவை
மனம் 787. வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்,
முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணுமே இந்த உலகில் சிறந்த இணையர்.
கோவை
மனம் 788. கணவன்-மனைவிக்கு இடையே புரிதலும்,
சகித்தலும், மதித்தலும் எங்குச் சமமாக இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இனிக்கும்.
கோவை
மனம் 789. யார் துணையும் இன்றி ஒவ்வொரு
நாளும் போராடிக் கொண்டே இருக்கும் ஒரு பெண் நூறு ஆண்களைவிட வலிமை கொண்டவள்.
கோவை
மனம் 790. ஒரு கை நீட்டி உதவி செய்தால்,
இரண்டு கைகள் உன்னை வணங்கும்.
கோவை
மனம் 791. முதல் குழந்தையைப் பெற்றெடுக்க
மரணத்தின் வாசலுக்கே சென்று மீண்டாலும், மறுகுழந்தையை மறுக்காதவள் பெண்.
கோவை
மனம் 792. நெருக்கமானவரின் கோபத்தை உணர்ந்து
பார், அதில் அவரின் உண்மையான அன்பைக் காண்பாய்.
கோவை
மனம் 793. உன் மனதை மன்னித்துவிட்டு மீண்டும்
ஒரு வாய்ப்பு கொடுக்காதீர்கள். அவர்கள் உங்கள்
மனதைத் தூள் தூளாக்கிவிடுவர்.
கோவை
மனம் 794. வரவேண்டிய இடத்தில் வராத கோபம்
பயனற்றது. வரக்கூடாத இடத்தில் வந்த கோபம் ஆபத்தானது.
கோவை
மனம் 795. நம்பிய உறவுகள் வஞ்சகம் புரியும்போது
உண்டாகும் வலி அளவிடற்கரியது.
கோவை
மனம் 796. ஒரு பெண்ணின் கோபத்திற்குப் பின்னால்
அவளின் ஆசையும் ஏக்கமும் மறைந்து இருக்கும்.
கோவை
மனம் 797. பெண்ணின் கோபத்தை உணர்ந்து கொண்டவனுக்கு
அவளே தேவதை.
கோவை
மனம் 798. பார்க்காமலும் பேசாமலும் இருக்கப்
பழகிக் கொண்டவனுக்கு நினைக்காமல் இருக்க முடியாதது காதல்.
கோவை
மனம் 799. ஏழையின் உண்மையை விட, பணக்காரனின்
பொய்க்கே மதிப்பு அதிகம்.
கோவை
மனம் 800. உன்னுடைய அறிவுரைகள் வீணாகும்
போது மௌனம் காத்துப்பார் உன்னுடைய குறைகள் உனக்கே தெரியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக