கோவை மனம் (576-600)
கோவை மனம் 576. உதவிகள் செய்தால் வழிப்போக்கனும் உறவாவான். உதவிகள் கேட்டால் இரத்த உறவும் எட்டி நிற்கும் பொல்லாத உலகம் இது. கோவை மனம் 577. இறந்தவர்களுக்குச் சிலை வைப்பதை விட இல்லாதோருக்கு இலை போடு, செய்த தவறுகள் தீயாய்ப் போகும். கோவை மனம் 578. தவறிழைக்காமல் தன்மானத்திற்குச் சீர்கேடு வந்தால் எவராக இருந்தாலும் எதிர்த்து நில். கோவை மனம் 579. யாரைப் போலவும் வாழாமல், தன்னுடைய பாதையில் இயல்பு மாறாமல் பயணம் செய். அதுவே, உன்னை தலை நிமிரச் செய்யும். கோவை மனம் 580. இப்போதைக்கு மரணம் இல்லை என்று நினைப்பவன் பொருள் சேர்ப்பதில் நாயாய் அலைவான். எப்பொழுதும் மரணம் வரலாம் என்று நினைப்பவன் வாழ்க்கை ஒவ்வொரு பொழுதும் அனுபவித்து வாழ்வான். கோவை மனம் 581. நிர்வாணத்தில் காமத்தைக் காணாதவனிடம் உண்மையான அன்பு குடிகொண்டிருக்கும். கோவை மனம் 582. உன்னை எதிர்ப்பவரை நேர்மையாக எதிர்த்...