கோவை மனம் (476-500)
கோவை மனம் 476. பெண்மையைக் கொண்டாடாத நாடும் வீடும் பாழ்.
கோவை
மனம் 477. மனம் நாடுவதைச் செய்தால் வெற்றியோ
தோல்வியோ எதுவானலும் அதைத் தாங்கும் சக்தி மனதிற்கு மட்டுமே உண்டு.
கோவை
மனம் 478. உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் உண்மையைத் துறக்காதே.
கோவை
மனம் 479. துன்பக் காலத்தில் பெற்ற அனுபவமே
வாழ்க்கையில் உன்னைச் செப்பனிடும் சிற்பி.
கோவை
மனம் 480. தோல்விகளையே பெற்றவனின் மனம்
வலிமையுடையதாக இருந்தால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.
கோவை
மனம் 481. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை
ஊட்டு அவனும் சாதனையாளனாவான்.
கோவை
மனம் 482. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை மறைந்திருக்கும். அத்திறமை வெளிப்படாத வரையே அவன் கையாளாகாதவன். வெளிப்பட்டபின் அவனே ஆகச் சிறந்தவன்.
கோவை
மனம் 483. வீட்டைப்போல் வீதியையும் நாட்டையும்
பேணிப்பார், சுகாதாரம் தானாய் வரும்.
கோவை மனம் 484. நாவடக்கம் உன்னை நாளும் உயர்த்தும்.
கோவை
மனம் 485. நன்றி இல்லாதவனிடம் நன்றியை எதிர்பார்க்காதே.
கோவை
மனம் 486. தாயின் பாசத்திற்கும் தந்தையின்
வளர்ப்பிற்கும் விலை வைக்க முடியாது.
கோவை
மனம் 487. தந்தையின் வருமானத்தில் மகனுக்குப்
பங்குண்டு. ஆனால், மகனின் வருமானத்தில் தந்தைக்கு?
கோவை
மனம் 488. நாம் எதைப் பிறருக்குச் செய்கிறோமோ,
அதுவே நமக்கு வந்து சேரும்.
கோவை
மனம் 489. நல்லோர் மனம் வருந்தினாலே வருத்தியவர்களுக்குத்
தானே தண்டனை கிடைக்கும்.
கோவை
மனம் 490. கோபக்காரர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள்.
கோவை
மனம் 491. அழுது அடம்பிடிக்கும் கோபக்காரன்
யாரையும் ஏமாற்ற மாட்டான்.
கோவை
மனம் 492. கஷ்டத்தில் உதவியவரையும், கஷ்டத்தில்
உதவாதவரையும், கஷ்டத்தை உண்டாக்கியவரையும் ஒருபொழுதும் மறக்காதே.
கோவை
மனம் 493. சொத்து சேர்க்காவிட்டாலும் வாழ்நாளில்
பாவத்தை மட்டும் சேர்க்காதே.
கோவை
மனம் 494. மதிக்கும் இடத்தில் மண்டியிடவும்
தயங்காதே. ஆனால், மதிக்காத இடத்தில் மன்னிப்புக் கூட கேட்காதே.
கோவை
மனம் 495. தனக்குண்டான வலியைப்போல் பிறருக்கும்
வலிக்கும் என்று உணர்பவனே நல்லவன்.
கோவை
மனம் 496. அன்பாகப் பேசிக்கொண்டு இருக்கின்ற
உறவை விட, அடிக்கடி சண்டையிட்டு உறவாடும் உறவுக்கு ஆயுள் அதிகம்.
கோவை
மனம் 497. ஆயிரமாயிரம் அன்பை மனத்திற்குள்
வைத்துக் கொண்டு வெளிக்காட்டத் தெரியாமல் எதிரியாகவே நடமாடும் ஓர் உயிர் “அப்பா”.
கோவை
மனம் 498. நீ அழும்போது அனுமதி பெறாமல்
நீ சாய எந்த தோள் அனுமதிக்கிறதோ அதுவே உனக்கான உண்மையான உறவு.
கோவை
மனம் 499. தோல்விகளையே சந்தித்தவன் என்றும்
சோர்ந்து போகமாட்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக