கோவை மனம் (401-425)
கோவை மனம் 401. மனத்தைக் கட்டுப்படுத்துபவன் மனிதனாகிறான்.
கோவை
மனம் 402. நல்லவர்களுக்குச் செய்த உதவியும்,
தீயவர்களிடம் சொன்ன இரகசியமும், அறிவாளிகளுக்குக் கூறிய அறிவுரையும் விரைவாகப் பரவும்.
கோவை
மனம் 403. அன்பு கொண்டவன் வெகுதொலைவில்
இருந்தாலும் என்றும் நம் இதயத்தில் இருப்பான்; வெறுக்கத்தக்க ஒருவன் அருகில் இருந்தாலும்
என்றும் வெகுதொலைவிலேயே இருப்பான்.
கோவை
மனம் 404. தோல்விகளைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு,
அதற்கான காரணங்களை ஆராய்ந்து தவறுகளைக் களைந்து செயற்படு வெற்றி நிச்சயம் கிட்டும்.
கோவை
மனம் 405. நல்லொழுக்கமே ஐம்புலன்களை அடக்கும்.
கோவை
மனம் 406. தற்பெருமையே தன்னுடைய இரகசியத்தை
எதிராளிக்குக் காட்டிக் கொடுக்கும்.
கோவை
மனம் 407. தன்னுடைய கருத்துரையும் ஆலோசனையும்
பிடிவாதமாக ஒருவன் வழங்கினால் அவை சபை ஏறாது.
கோவை
மனம் 408. இரும்பும் இரும்பும் உருக்கும் வரை ஒட்டாது.
கோவை
மனம் 409. தீய பழக்கங்கள் கொண்டவனால் எச்செயலிலும்
வெற்றி காண்பது அரிது.
கோவை
மனம் 410. சூதாட்டம் கேடு தரும்.
கோவை
மனம் 411. காமமும் மோகமும் ஒழுக்கச் சீர்கேட்டைத்
தரும்.
கோவை
மனம் 412. ஒருவனின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும்
அவனது ஒழுக்கமும் பண்புமே காரணம்.
கோவை
மனம் 413. சரியான முறையில் திட்டமிடுதலே
பணியை எளிதாக்கும்.
கோவை
மனம் 414. அதிகமான மன அழுத்தமே ஒருவனைச்
சோகமாக்கும்.
கோவை
மனம் 415. நிகழ்கால அழிவானது வருங்கால அழிவைவிடப்
பெரியது.
கோவை
மனம் 416. ஒரேவொரு குறை பல நிறைகளை அழிக்கும்.
கோவை
மனம் 417. சோம்பேறிக்கு நிகழ்காலமும் எதிர்காலமும்
இருக்காது.
கோவை
மனம் 418. எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி
இணையும் உறவே சிறந்தது.
கோவை
மனம் 419. பகைவரை நண்பனாக்கிக் கொண்டாலும்
பகைவராகவே பார்; உன்னை நீ காப்பாய்.
கோவை
மனம் 420. பொறுமையற்றவன் ஆடம்பர வாழ்வில்
ஈடுபட்டு நிகழ்காலம், எதிர்காலம் இன்றி அழிவான்.
கோவை
மனம் 421. உண்ட உணவு செரித்தால் நோய் நாடாது.
செரிக்காத உணவு துன்பம் தரும்.
கோவை
மனம் 422. நோயை விட எதிரியின் நட்பு கொடுமையானது.
கோவை
மனம் 423. தீமை சிறிதே யானாலும் துன்பம்
தரும்.
கோவை
மனம் 424. திறமை உள்ளவன் பிறப்பைக் கண்டு
அஞ்சமாட்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக