கோவை மனம் (551-575)
கோவை மனம் 551. ஒருவரை இழக்கும்போது வரும் கண்ணீரை விட அவர்களை இழக்கக் கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு வலி அதிகம்.
கோவை
மனம் 552. யாரும் குளத்தைக் கலங்கடிக்கச்
செய்யலாம். தெளிய வைக்க அந்தக் குளத்தால் மட்டுமே முடியும் என்பதுபோல் நம் மனதை யாரும்
கலங்கடிக்கலாம், கலங்கிய மனது தெளிவு பெற உன்னால் மட்டுமே முடியும்.
கோவை
மனம் 553. பயத்தால் வரும் பக்தியும், பக்தியால்
வரும் புத்தியும், புத்தியால் வரும் வெற்றியும், வெற்றியால் வரும் வசதியும், வசதியால்
வரும் திமிரும், திமிரால் வந்த ஆணவமும், ஆவணத்தால் அழிவும் வரும்போது மீண்டும் பயம்
வருகிறது, பயம் வந்ததும் பக்தி வருகிறது. இதுதான் மனித வாழ்க்கை.
கோமைவ
மனம் 554. முதலில் பெற்றோருக்காகவும், பிறகு
கணவருக்காகவும், அடுத்து பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து தனக்காக வாழாதவள்தான் பெண்.
கோவை
மனம் 555. துன்பம் தருபவர்களைச் சந்திப்பதையும்
சிந்திப்பதையும் தவிர்த்துப்பார், உன்னால் நிம்மதியாக வாழ முடியும்.
கோவை
மனம் 556. உத்தம நண்பனாக இரு அல்லது எதிரியாக இரு. ஆனால், துரோகியாக மட்டும் இருக்காதே.
கோவை
மனம் 557. உறவுகளை இழக்க மனம் இல்லாதவர்கள்
விட்டுக் கொடுப்பார்கள். உறவுகளே வேண்டாம் என்பவர்கள் விட்டுப் போவார்கள்.
கோவை
மனம் 558. நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்
காட்டுபவர்களிடம் கோபம் கொள்ளாதே. மாறாக, குறைகளைச்
சரி செய். வாழ்க்கை சுகமாகும்.
கோவை
மனம் 559. முடிந்ததைக் கனவாகவும், நடக்கப் போவதைச் சவாலாகவும் கொள். வாழ்க்கை இனிக்கும்.
கோவை
மனம் 560. உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது
அல்ல. நீ சேரும் இடத்தைப் பொருத்தே உன் மதிப்பு
அமையும்.
கோவை
மனம் 561. துன்பம் கண்டபோதெல்லாம் தளராமல்
ஓய்வெடுத்துச் சிந்தித்துச் செயற்படு. வெற்றிப் பாதை தெளிவாகத் தெரியும்.
கோவை
மனம் 562. சொல் புத்தியும், சுய புத்தியும்
இல்லாதவன் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்.
கோவை
மனம் 563. கோபச் சொற்கள் உண்மையானவை. கொஞ்சும்
சொற்கள் பொய்யானவை என்பதை உணர்ந்தால் மனம் தெளிவடையும்.
கோவை
மனம் 564. உண்மையும் நேர்மையும் உன்னுடைய
அழியாச் சொத்து.
கோவை
மனம் 565. ஒரு மனதைக் காயப்படுத்தி வேறொரு
மனதை மகிழ்விக்காதே. நீ எய்த அம்பு எப்பொழுதும்
உன்னைத் தாக்கும்.
கோவை
மனம் 566. இன்று நீ முக்கியமாகக் கருதப்பட்டவர்களுக்கு,
நாளை அவர்களுக்கு ஒன்றுமில்லாதவர்களாக ஆவீர். எனவே, தனியே வாழப் பழகு.
கோவை
மனம் 567. கூட்டமாக இருக்கின்ற இடத்தில்
உட்கார இடம்தேடுபவன், காலியாக இருக்கும் இடத்தில் எந்த இடத்தில் உட்காரலாம் என ஆராயத்
தொடங்குபவன் அலைமனம் கொண்டவன்.
கோவை
மனம் 568. பறவை உயிருடன் இருக்கும்போது
எறும்பைத் தின்னும். அதே பறவை இறந்தவுடன் எறும்புகள்
பறவையைத் தின்னும். இதனை உணர்ந்தவன் வாழ்க்கை
சிறக்கும்.
கோவை
மனம் 569. ஒருவளிடம் மட்டும் அதிகமாகக்
கோபப்படும் ஆண், மற்ற பெண்களிடம் கொஞ்சிப் பேசாதவன்.
கோவை
மனம் 570. ஏற்றப்பட்டவனை விட ஏற்றிவிட்டவன்
உயர்ந்தவன்.
கோவை
மனம் 571. நாம் பாவம் பார்த்த யாரோ ஒருவர்தான்
தக்க நேரத்தில் நம்மைப் பதம் பார்த்திருப்பார்கள்.
கோவை
மனம் 572. யார் மனதையும் காயப்படுத்தாமல்
ஒதுங்கிச் செல்பவரைத் தேடிச் சென்று அவர்மீது முதல் கல்லை எறியும் உலகம் இது.
கோவை
மனம் 573. சாப்பிடுங்க என்று மனைவியும்,
சாப்பிட்டாயா என்று கணவனும் கேட்டுக் கொண்டாலே அவர்களுக்குள்ளான ஊடல் கூடலாகும்.
கோவை
மனம் 574. உன்னைத் தனிமைப்படுத்திப் பார்,
உன்னைச் சுற்றி உள்ளவர்கள் எவ்வளவு போலியானவர்களாக இருந்தார்கள் என்பதை உணர்வீர்.
கருத்துகள்
கருத்துரையிடுக