கோவை மனம் (301-325)
கோவை மனம் 301. ஒன்றின் மீது பற்று வைக்கும்போது அப்பற்று நம்பிக்கையாக உருமாறி உன் முயற்சியைத் திருவினையாக்கும்.
கோவை மனம் 302. தன் தந்தையின் முன்னேற்றத்தில் தொற்றி வால் பிடித்து
வளர்வது முறையான வளர்ச்சி அல்ல.
கோவை மனம் 303. சம்பாதித்த பணத்தைச் சரியான முறையில் கையாளதவர்
பிறரின் கட்டுப்பாட்டுக்குள் வருவர்.
கோவை மனம் 304. மூத்தோர் வாழ்க்கை தன்னைச் சார்ந்தவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
கோவை மனம் 305. செய்யாத குற்றத்திற்குத் தண்டனை கிடைத்தது என்றால்,
இத்தண்டனை முன் செய்த குற்றத்திற்கு என்று ஏற்று, கற்றுக்கொள்.
கோவை மனம் 306. தன்னை உணர்ந்தவனும், தனக்குத் தெரிந்ததைச் செயலாற்றுபவனும்
செயலாற்றும்போது ஏற்படும் சிக்கல்களைக் களைபவனே சிறந்த மனிதன்.
கோவை மனம் 307. அதிக கோபமும், மிக்க மகிழ்ச்சியும், கர்வமும்,
வெட்கமும், திமிரும் நீக்கி வாழ்பவனே எல்லோராலும் மதிக்கப்படுவான்.
கோவை மனம் 308. உள்ளுணர்வோடு ஒருவரை வாழ்த்தும்போது உன் மனதிலிருந்து
பகைமை மாறும், அமைதி பெருகும்.
கோவை மனம் 309. ஒருவனின் பழக்க வழக்கங்களே ஒழுக்கத்தின் கண்ணாடி.
கோவை மனம் 310. முற்கால அனுபவத்தால் இக்காலத் தேவைகளை எதிர்கால
நலனுக்கு எவையெவை பயன்படும் என்று கண்டு வாழ். நீயே, உலகின் சிறந்த மனிதன்.
கோவை மனம் 311. கொலை செய்வதற்கு ஈடானது காமக்காதல்.
கோவை மனம் 312. சாலையில்
நடந்தவற்றை நினைத்துக் கொண்டு சோலைக்குள் நுழையாதே. சோலைத் தென்றல் அனலாகிவிடும்.
கோவை
மனம் 313. அதிருப்தி என்றால் பெற்ற இன்பமும்
துன்பமே.
கோவை
மனம் 314. நண்பர்களை ஒட்டியே அவன் நல்லவனாவதும், கெட்டவனாவதும்.
கோவை
மனம் 315. பேராபத்தில் மாட்டிக் கொண்டவன்
தன் முயற்சி ஏதும் இல்லாமல் தன்னைக் காப்பாற்ற பிறரை அழைப்பவன் தன்னையே இழப்பான்.
கோவை
மனம் 316. பெற்றோரைப் போற்றி வாழ்ந்தவனும்,
மற்றோரை நேசித்து வாழ்ந்தவனும், உற்றாரைச் சுற்றி வாழ்ந்தவனும் என்றும் நிலைத்து எல்லோர்
மனதிலும் நீடித்து வாழ்ந்து கொண்டிருப்பான்.
கோவை
மனம் 317. கரையாது சேரும் சேமிப்பை விட
கரைந்து சேரும் சேமிப்பே உன்னைத் தலைநிமிரச் செய்யும்.
கோவை
மனம் 318. தன் கடமையைச் சரியாக ஆக்கிய தந்தைக்குத்
தன் மக்கள் உடனிருப்பதே வீடு பேறு.
கோவை
மனம் 319. இன்பத்திலேயே வாழ்ந்தவனுக்கு
ஒரு துளி துன்பமும் பெருந்துன்பம். துன்பத்திலேயே
வாழ்ந்தவனுக்கு ஒரு துளி இன்பமும் பேரின்பம்.
கோவை
மனம் 320. இன்பத்திலேயே வாழ்ந்து பார் துன்பத்தின்
எல்லை புரியும். துன்பத்திலேயே வாழ்ந்து பார் இன்பத்தின் எல்லை புரியும். ஏனெனில், இன்பமும் துன்பமும் நிலையற்றவை.
கோவை
மனம் 321. மகளாகப் பிறந்து மனைவியாக வாழ்வதும்,
மகனாகப் பிறந்து கணவனாக வாழ்வதும் இயல்பு. என்றாலும் கணவன் – மனைவியாக ஒத்ததை ஒத்ததே
ஏற்கும் என்ற விதிப்படி இருவரும் ஒத்து வாழ்வதே சிறப்பு.
கோவை
மனம் 322. கூச்சப்படாமல் கேட்கும் உதவியும், யோசிக்காமல் செய்யும் உதவியும் மேன்மை
அடையும்.
கோவை
மனம் 323. ஆணவத்திலிருந்து உன் மனதை வெளியேற்று. எவ்வளவு பெரிய பாராட்டும் உனக்குச் சாதாரணமாகவே
இருக்கும்.
கோவை
மனம் 324. ஆயுதத்தின் வலிமையை உன்னுடைய
கையே தீர்மானிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக