கோவை மனம் (376-400)
கோவை மனம் 376. சிறிய நாணல்கள் ஒன்று சேர்ந்து பெருமழையை எதிர்கொள்வதுபோல் பல சிறிய பொருள்கள் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய எதிரியையும் வீழ்த்தலாம்.
கோவை
மனம் 377. அகத்தொன்றும் புறத்தொன்றும் பேசுபவனை
நண்பனாக என்றும் ஏற்காதே.
கோவை
மனம் 378. இரகசியங்களை ஆறுதலுக்குக் கூட
மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர். மற்றவர்களின் கோபக் காலத்தில் உன் இரகசியங்கள் பகிரப்படும்.
கோவை
மனம் 379. தன்னுடைய நல்ல திட்டங்களையும்
நோக்கங்களையும் செயற்படுத்துவதற்கு முன் இரகசியம் காப்பதே சிறந்தது.
கோவை
மனம் 380. நெருக்கமானவர் மீது கொள்ளும்
அளவுக்கு அதிகமான பாசம் பல குறைபாடுகளை உண்டாக்கும்.
கோவை
மனம் 381. தான் செய்யும் தவறை முன்னரே ஒருவன்
உணர்ந்து விட்டால் அவனது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
கோவை
மனம் 382. நெருக்கடியில் உதவாத உறவையும்,
ஆபத்தில் உதவாத நண்பனையும் விலக்கு.
கோவை
மனம் 383. புத்திக் கூர்மையும், அறிவுத்
திறனும் உடல் வலிமையைவிட மேலானது.
கோவை
மனம் 384. மிகுதியான இன்பமும் மிகுதியான
துன்பமும் கேடு தரும்.
கோவை
மனம் 385. குறிக்கோளுடன் செய்யும் விடாமுயற்சி
உயர்வைத் தரும்.
கோவை
மனம் 386. கடினமான நேரம் வந்த போதும் எதற்கும்
அஞ்சாமல் தொடர்ந்து எதிர்கொண்டால் வெற்றி தனதாகும்.
கோவை
மனம் 387. பயிற்சி இல்லாத கல்வியும், செரிக்காத
உணவும் நஞ்சு.
கோவை
மனம் 388. கொடியவனிடம் வெளிப்படைப் பேச்சு
இருக்காது.
கோவை
மனம் 389. இன்பமும் துன்பமும் துயரமும்
உலக மக்களின் வாழ்வில் அங்கங்கள்.
கோவை
மனம் 390. நஞ்சற்ற பாம்பு படமெடுத்து தன்னைக்
காத்துக் கொள்வதுபோல் இச்சமூகத்தில் நிம்மதியாக வாழ சிறிதளவு பகட்டும், கண்டிப்பும்
தேவை.
கோவை
மனம் 391. கற்பிக்காத கல்வியும், விவசாயம்
செய்யாத நிலமும், பயன்படாத பொருளும் தளபதி இல்லாத படைபோல் விரைவில் அழியும்.
கோவை
மனம் 392. தர்மம் ஏழ்மையையும், நன்னடத்தை
சோகத்தையும், உண்மையறிவு அறியாமையையும், மனவுறுதி அச்சத்தையும் ஒழிக்கும்.
கோவை மனம் 393. பயன்படுத்தாத
அறிவு வீண்.
கோவை
மனம் 394. ஒழுக்கமில்லாத அழகு உயிரற்ற உடல்.
கோவை
மனம் 395. தனது இரகசியங்களைப் பகிர்ந்து
கொள்பவர், தன்னுடைய நஞ்சால் தானே அழியும் பாம்பாவர்.
கோவை
மனம் 396. ஒருவனின் இனிமையான சொற்கள் பகைவனையும்
நண்பனாக்கும்.
கோவை
மனம் 397. கொக்கைப்போல் செயற்படுவான் அறிவாளி.
கோவை
மனம் 398. கடலில் பெய்யும் மழை போல பசிக்காதவனுக்கு
அளிக்கும் உணவும், செல்வந்தனுக்குத் தரும் தர்மமும், பகலில் எரியும் விளக்கும் வீண்.
கோவை
மனம் 399. மதுப்பானையை நெருப்பில் சுட்டாலும்
சுத்தமாகாது போல் தீய எண்ணம் கொண்டவனின் மனம் எத்தனை முறை தூய நீரில் கழுவினாலும் சுத்தமாகாது.
கோவை
மனம் 400. ஒருவன் உண்ணும் உணவுக்கு ஏற்பவே
அவனது குணமும் பண்பும் நடத்தைகளும் அமையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக