கோவை மனம் (451-475)
கோவை மனம் 451. குடத்து நீர் ஒரு சிறு ஓட்டை இருந்தாலும் வெளியேறுவது போல் ஐம்புலன்களில் ஒரு புலன் தன் கட்டுப்பாட்டை இழந்தாலும் மற்ற புலன்களும் கட்டுக்கடங்காமல் போகும்.
கோவை
மனம் 452. தீயோன், மறந்த பகையை நினைவூட்டுவான்.
கோவை
மனம் 453. ஆத்மாவும் உடம்பும் ஒன்றென்று
நினைப்பவர்கள் உடம்பு சுகத்திற்காக ஆத்மாவைக் கலங்கப்படுத்துவர்.
கோவை
மனம் 454. தனது சொத்து முற்றிலும் இழந்தபோதும்
தன்னம்பிக்கையோடு செயல்பட்டு மீள்பவன் தைரியசாலி.
கோவை
மனம் 455. ஆசை கொண்டால் பயம் வரும்.
கோவை
மனம் 456. மற்றவர்கள் மீது கொள்ளும் பொறாமையே ஆசையில் வாசல்.
கோவை
மனம் 457. தக்காரிடம் தக்கவற்றை கூறுதல்
சால்பு.
கோவை
மனம் 458. பிறரை மனத்தாலோ, உடம்பாலோ, சொல்லாலோ
வஞ்சிக்காதவர்கள் காலத்தால் வாழ்வர்.
கோவை
மனம் 459. நேர்மையற்ற வழியில் சேர்த்த பொருளைத்
தானமாகக் கொடுப்பதைவிட நேர் வழியில் சேர்த்த பொருளைக் கொடுப்பதே சிறந்த தானம்.
கோவை
மனம் 460. தானம் செய்ததைச் சுட்டிக் காட்டுவது
தானமல்ல.
கோவை
மனம் 461. சதிக்கே முக்கியத்துவம் கொடுத்து
உண்மைக்கும் உழைப்புக்கும் மரியாதை கொடுக்காத நாடும் வீடும் பாழ்.
கோவை
மனம் 462. கேடு புரிவதாலே புகழ் அடைந்தவனும்,
நல்லது செய்தே புகழ் அடைந்தவனும் எதிர்காலத்தில் அவரவர் வினைப்படி பாராட்டுப் பெறுவர்.
கோவை
மனம் 463. உங்களின் ஒவ்வொரு நற்சிரிப்பும்
மற்றவர்கள் மீது உங்களின் அன்பு வெளிப்படும் ஒரு அளவுகோல்.
கோவை
மனம் 464. நேற்று நம் கையில் இல்லை. இன்று
நீ செய்யும் செயலே நாளை உனதாக இருக்கும்.
கோவை
மனம் 465. அன்பான வார்த்தைகள் சுருக்கமாகவும்
பேசுவதற்கு எளிதாகவும் இருந்தால் அவற்றின் எதிரொலி உன்னை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
கோவை மனம் 466. உலக
அமைதியை மேம்படுத்துவதற்கு முதலில் குடும்ப அமைதியை மேற்கொள்.
கோவை மனம் 467. குடும்ப
அமைதியை மேற்கொண்டவனால் மட்டுமே உலக அமைதிக்கு வித்திட முடியும்.
கோவை
மனம் 468. சோற்றுப் பசியைக் கூட அகற்றிவிடலாம். ஆனால், அன்புப் பசியை ஒருவனுக்கு அகற்றுவது எளிதல்ல.
கோவை
மனம் 469. எல்லோரிடமும் பணிவுடன் இருப்பதே
ஆண்மைக்கு அழகு.
கோவை
மனம் 470. புகழும் அவமானமும் பணிவதால் வருவதல்ல. அவனவன் செயல்களால் வருவதே.
கோவை
மனம் 471. ஒருவரை ஏமாற்றிப் பெற்ற சொத்து,
உனக்கென நிலைக்காமல், நிச்சயம் ஒருநாள் உன்னை விட்டுப் போகும்.
கோவை
மனம் 472. அவமானப்பட்ட இடத்திலேயே உன் சாதனையை
நிகழ்த்திக்காட்டு, உன் புகழ் உச்சிமேல் ஏறும்.
கோவை
மனம் 473. உன்னதமான தாயும் தந்தையுமே ஏமாற்றத
உறவு.
கோவை
மனம் 474. ஆடம்பரமாக வாழ்வதல்ல வாழ்க்கை.
ஆரோக்கியமாக வாழ்வதே ஆனந்தமான வாழ்க்கை.
கருத்துகள்
கருத்துரையிடுக