இடுகைகள்

கோவை மனம் (601-625)

  கோவை மனம் 601.       ஒருவருடைய குணம், சொல்லில் இல்லை. செயலிலேயே தெரியும். கோவை மனம் 602.       ஆண் பிள்ளை வாரிசு என்றால், பெண் பிள்ளை உனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. கோவை மனம் 603.       தன் மனைவியும் – அம்மாவும் சிரித்துப் பேசினால்தான் ஆணின் மகிழ்ச்சி நிலைக்கும். கோவை மனம் 604.       மெட்டி தேய தேயக் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தேயும். கோவை மனம் 605.       அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததில்லை.   ஆனால், அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதி வரை நன்றாக வாழ்ந்ததில்லை. கோவை மனம் 606.       புறம் பேசுபவர்களின் சொற்களைப் புறந்தள்ளிவிட்டு, உன் மனம் சொல்லும் வழியில் முன்னேறு. கோவை மனம் 607.       அடுத்தவரைப் போல் நாம் வாழ வேண்டும் என்று நினைப்பதைவிட, மற்றவர்கள் நம்மைப்போல் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டு. கோவை மனம் 608.       தொடக்கத்தில் நல்லவை நரகமாகவும், தீயவை சொ...

கோவை மனம் (576-600)

  கோவை மனம் 576.       உதவிகள் செய்தால் வழிப்போக்கனும் உறவாவான்.   உதவிகள் கேட்டால் இரத்த உறவும் எட்டி நிற்கும் பொல்லாத உலகம் இது. கோவை மனம் 577.      இறந்தவர்களுக்குச் சிலை வைப்பதை விட இல்லாதோருக்கு இலை போடு, செய்த தவறுகள் தீயாய்ப் போகும். கோவை மனம் 578.      தவறிழைக்காமல் தன்மானத்திற்குச் சீர்கேடு வந்தால் எவராக இருந்தாலும் எதிர்த்து நில். கோவை மனம் 579.      யாரைப் போலவும் வாழாமல், தன்னுடைய பாதையில் இயல்பு மாறாமல் பயணம் செய். அதுவே, உன்னை தலை நிமிரச் செய்யும். கோவை மனம் 580.      இப்போதைக்கு மரணம் இல்லை என்று நினைப்பவன் பொருள் சேர்ப்பதில் நாயாய் அலைவான்.  எப்பொழுதும் மரணம் வரலாம் என்று நினைப்பவன் வாழ்க்கை ஒவ்வொரு பொழுதும் அனுபவித்து வாழ்வான். கோவை மனம் 581.      நிர்வாணத்தில் காமத்தைக் காணாதவனிடம் உண்மையான அன்பு குடிகொண்டிருக்கும். கோவை மனம் 582.      உன்னை எதிர்ப்பவரை நேர்மையாக எதிர்த்...

கோவை மனம் (551-575)

  கோவை மனம் 551.       ஒருவரை இழக்கும்போது வரும் கண்ணீரை விட அவர்களை இழக்கக் கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு வலி அதிகம். கோவை மனம் 552.      யாரும் குளத்தைக் கலங்கடிக்கச் செய்யலாம். தெளிய வைக்க அந்தக் குளத்தால் மட்டுமே முடியும் என்பதுபோல் நம் மனதை யாரும் கலங்கடிக்கலாம், கலங்கிய மனது தெளிவு பெற உன்னால் மட்டுமே முடியும். கோவை மனம் 553.      பயத்தால் வரும் பக்தியும், பக்தியால் வரும் புத்தியும், புத்தியால் வரும் வெற்றியும், வெற்றியால் வரும் வசதியும், வசதியால் வரும் திமிரும், திமிரால் வந்த ஆணவமும், ஆவணத்தால் அழிவும் வரும்போது மீண்டும் பயம் வருகிறது, பயம் வந்ததும் பக்தி வருகிறது. இதுதான் மனித வாழ்க்கை. கோமைவ மனம் 554.   முதலில் பெற்றோருக்காகவும், பிறகு கணவருக்காகவும், அடுத்து பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து தனக்காக வாழாதவள்தான் பெண். கோவை மனம் 555.      துன்பம் தருபவர்களைச் சந்திப்பதையும் சிந்திப்பதையும் தவிர்த்துப்பார், உன்னால் நிம்மதியாக வாழ முடியும். கோவை ...

கோவை மனம் (526-550)

  கோவை மனம் 526.       மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் அம்மாவின் கருவறை. அரவணைக்கும் அப்பாவின் மடியும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தான். கோவை மனம் 527.      நல்லவர்களாய் நடிப்பவர்களோடு நம்பிக்கையோடு பயணிப்பதுதான் உலகிலேயே மிகவும் ஆபத்தான பயணம். கோவை மனம் 528.      நடிப்பவனுக்கு ரோஷம் இருக்காது, உறவுகள் இருக்கும். நடிக்கத் தெரியாதவனுக்கு ரோஷம் இருக்கும் உறவுகள் இருக்காது. கோவை மனம் 529.      எழுத வைப்பதோ படிக்க வைப்பதோ அல்ல; சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் பயன்படுவதே கல்வி. கோவை மனம் 530.      தாய்-தந்தையர்க்கு சோறு போடாதவன் ஊருக்கே சோறு போட்டாலும் புண்ணியம் அணுவளவும் கிடைக்காது. கோவை மனம் 531.      நாய் குரைப்பதைச் சிங்கம் எப்பொழுதும் பொருட்படுத்தாததுபோல் புறம் பேசுவோரை மதியாதே.  கோவை மனம் 532.      உனக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறையும்போது நீயாகவே விலகி விடுவதுதான் உனக்கு மரியாதை. க...

கோவை மனம் (501-525)

  கோவை மனம் 501.       விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் எதிரிகூட அஞ்சுவான். கோவை மனம் 502.      கோபத்தில் கோபத்தைத் தூக்கி எறி. வாழ்க்கை இனிக்கும். கோவை மனம் 503.      வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் கவனமாக இரு.  கல் உயிரைக் கொல்லும், சொல் உறவைக் கொல்லும். கோவை மனம் 504.      கை நீட்டி அழைப்பது உத்தம தந்தையாக இருக்கும்போது நீ கடலிலும் துணிந்து குதிக்கலாம். கோவை மனம் 505.      யாரையும் நம்பி வாழாதே. உன்னை  மட்டுமே நம்பி வாழ். கோவை மனம் 506.      யாரையும் முழுவதும் சார்ந்து இருக்காதே.  காலம் மாறும்போதும் கலங்கிப் போவாய். கோவை மனம் 507.      முட்டாளாக ஏமாந்தவர்களைவிட இரக்கக் குணத்தால் ஏமாறுபவர்களே அதிகம். கோவை மனம் 508.      பிறரால் காயப்படலாம். பிடித்தவர்களால் காயப்படாதே. கோவை மனம் 509.      இளமையில் தந்தை...

கோவை மனம் (476-500)

  கோவை மனம் 476.       பெண்மையைக் கொண்டாடாத நாடும் வீடும் பாழ். கோவை மனம் 477.      மனம் நாடுவதைச் செய்தால் வெற்றியோ தோல்வியோ எதுவானலும் அதைத் தாங்கும் சக்தி மனதிற்கு மட்டுமே உண்டு. கோவை மனம் 478.      உண்மைக்காக எதையும் துறக்கலாம்.  ஆனால், எக்காரணம் கொண்டும் உண்மையைத் துறக்காதே. கோவை மனம் 479.      துன்பக் காலத்தில் பெற்ற அனுபவமே வாழ்க்கையில் உன்னைச் செப்பனிடும் சிற்பி. கோவை மனம் 480.      தோல்விகளையே பெற்றவனின் மனம் வலிமையுடையதாக இருந்தால்தான் இவ்வுலகில் வாழ முடியும். கோவை மனம் 481.      உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டு அவனும் சாதனையாளனாவான். கோவை மனம் 482.      ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை மறைந்திருக்கும்.  அத்திறமை வெளிப்படாத வரையே அவன் கையாளாகாதவன்.  வெளிப்பட்டபின் அவனே ஆகச் சிறந்தவன். கோவை மனம் 483.      வீட்டைப்போல் வீதியையும் நாட்டையும் பேணிப்பா...

கோவை மனம் (451-475)

  கோவை   மனம் 451.      குடத்து நீர் ஒரு சிறு ஓட்டை இருந்தாலும் வெளியேறுவது போல் ஐம்புலன்களில் ஒரு புலன் தன் கட்டுப்பாட்டை இழந்தாலும் மற்ற புலன்களும் கட்டுக்கடங்காமல் போகும். கோவை மனம் 452.      தீயோன், மறந்த பகையை நினைவூட்டுவான். கோவை மனம் 453.      ஆத்மாவும் உடம்பும் ஒன்றென்று நினைப்பவர்கள் உடம்பு சுகத்திற்காக ஆத்மாவைக் கலங்கப்படுத்துவர். கோவை மனம் 454.      தனது சொத்து முற்றிலும் இழந்தபோதும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு மீள்பவன் தைரியசாலி. கோவை மனம் 455.      ஆசை கொண்டால் பயம் வரும். கோவை மனம் 456.      மற்றவர்கள் மீது கொள்ளும்  பொறாமையே ஆசையில் வாசல். கோவை மனம் 457.      தக்காரிடம் தக்கவற்றை கூறுதல் சால்பு. கோவை மனம் 458.      பிறரை மனத்தாலோ, உடம்பாலோ, சொல்லாலோ வஞ்சிக்காதவர்கள் காலத்தால் வாழ்வர். கோவை மனம் 459.      நேர்மையற்ற வழியில் சே...