கோவை மனம் (276-300)
கோவை மனம் 276. ஆணவக்காரன் நல்ல நண்பர்களை இழப்பான்.
கோவை மனம் 277. தன்னால் செய்ய முடியாததைப் பிறர் செய்யும்போது
அவர்மீது வெறுப்பு தோன்றுவது இயல்பு. இது அவரல்
எப்படி முடிந்தது என்று விடை கண்டு செயற்படுவது சால்பு.
கோவை மனம் 278. முட்டாள்களை அறவே துடைத்தெறி.
கோவை மனம் 279. கணவன்-மனைவிக்கிடையே ஒத்த அன்பு நிலவினால் குடும்பம்
முன்னேறும், குழுவினரிடையே ஒத்த அன்பு நிலவினால் நாடே முன்னேறும்.
கோவை மனம் 280. நம்பிக்கை அளவுக்கு மீறும்போது அழிவும் கேலியும்
எதிரே நிற்கும். இதனை வெல்பவனே அறிவாளி.
கோவை மனம் 281.
கோவை மனம் 282. செத்த பிணத்திலிருந்து கோடித் துணியை வெட்டியான்
உருவிக் கொள்வதைப்போல் உன் வாழ்க்கையில் எதுவும் இறுதிவரை இல்லை என்பதை உணர்ந்தால்
நீ, மாமனிதன்.
கோவை மனம் 283. நீ செய்யும் எந்தச் செயலானாலும் அதன் அடித்தளம்
வரை சென்று நன்றாகப் புரிந்துக்கொண்டு செயற்படு, நீயே அதில் வல்லவனாகத் திகழ்வாய்.
கோவை மனம் 284. உண்மையாக நேசித்துச் செய்த ஒரு வேலையை மறப்பது
கடினம்தான். என்றாலும் உண்மையை உணர்ந்து அதன் மறுசிந்தனையை எண்ணிச் செயற்படு, உனக்கான
இன்னொரு பரிமாணத்தின் சொர்க்க வாசல் திறக்கும்.
கோவை மனம் 285. உனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு உலகை
வலம் வந்தால் உன்னுடைய உள்ளங்கைக்குள் உலகம் இருக்கும்.
கோவை மனம் 286. நோய் கண்டு சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமல்
காத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.
கோவை மனம் 287. உயிர் வீடுபேறு அடைய உடலைப் பேணு.
கோவை மனம் 288. உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் ஆகிய
ஐந்தும் முறையே சீராக இருந்தால் உடல் நலம் காக்கப்படும்.
கோவை மனம் 289. தூக்கம், தாகம், சிறுநீர், மலம், தும்மல், இருமல்,
வாந்தி, பசி, கொட்டாவி, ஏப்பம், சுக்கிலம், கண்ணீர், அபானவாயு, மூச்சு ஆகியவற்றை அடக்கின்
உடல் நலம் கெடும்.
கோவை மனம் 290. மனத்தை அடக்காதே. அது அலையும். ஆனால், மனத்தை
அறிந்து பார், அது அடங்கும்.
கோவை மனம் 291. மனம் நோய்வாய்ப்பட்டால் அதற்கு மருந்து மனமே.
கோவை மனம் 292. தேவைகளைச் சுருக்கு வாழ்க்கை சுகமாகும்.
கோவை மனம் 293. ஆசைகளைச் சீரமைத்தால் உடல் நலம் பெறும்.
கோவை மனம் 294. கோபம், அச்சம், கவலை ஆகியன மனித வாழ்வைச் சீரழிக்கும்
நச்சு.
கோவை மனம் 295. ஒருவனின் தவறைக் குத்திக் காட்டும் அறிவுரை பலன்
தராது.
கோவை மனம் 296. துன்பத்தில் எதிர் நீச்சல் போட்டால் இன்பம் நிச்சயம்
உண்டு.
கோவை மனம் 297. ஒருமித்த உணர்வோடும் எண்ணத்தோடும் நிலையாக வாழ்ந்தால்
ஒரு கதவு மூடப்பட்டாலும் மறுகதவு உனக்காகத் திறந்திருக்கும்.
கோவை மனம் 298. இலை உதிர்ந்து மக்கி காட்டில் தானே உரமாவது போல்
நாட்டில் வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும்
முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
கோவை மனம் 299. பணத்தைச் சரியான முறையில் கையாளாத வீடும் நாடும்
பிறரின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக