கோவை மனம் (76-100)
கோவை மனம் 76. அதிகாரத்தால் அடையும் பயன் அனுதினமும் நிலைக்காது.
கோவை மனம் 77. இடைவெளி
இல்லாமல் அழகாக இருந்த கைவிரல்களுக்கு இடையில் இடைவெளி உண்டாக்குமே அழகுக்காக
போட்ட மோதிரம்.
கோவை மனம் 78. ஏணி ஏறுவதற்கு
மட்டுமல்ல இறங்கவும் பயன்படும்.
கோவை மனம் 79. அணையிலிருந்து
நீர் வழியலாம் ஒழுகத்தான் கூடாது.
கோவை மனம் 80. வாழ்க்கையில்
தவறுகள் நடக்கலாம். வாழ்க்கையே தவறாகத்தான் இருக்கக் கூடாது.
கோவை மனம் 81. அரசியலில்
இருந்துவிட்டு, அதிலிருந்து நீங்கள் விலகி இருந்தாலும் நாயது
வால்போல் அரசியல் உங்களை விலக்கி வைக்காது.
கோவை மனம் 82. உனக்குத்
தொடர்பில்லாத பேச்சுக்கள் உன் காதில் விழுந்தாலும் கேட்டுக்கொள். எதிர்காலத்தில்
ஏதோவொரு நேரத்தில் அது உனக்கும் பயன்படும்.
கோவை
மனம் 83. விரும்பாமல் சுமப்பதைவிட விரும்பிச் சுமப்பதே சுகம்.
கோவை மனம் 84. மரணம் தனக்கும் உண்டு என்பதை
உணர்ந்து செயல்படு குற்றங்கள் குறையும்.
கோவை மனம் 85. வலிக்கிற
இடத்தில் காயம் சிறியதே என்றாலும் காயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது
முக்கியம்.
கோவை மனம் 86. மரணக் காலத்தில் வாழ்ந்து
பார். உன்னால் கொடுமையை அனுபவித்தவர்களின் நிலைமை புரியும்.
கோவை மனம் 87. மன்னிக்க
முடியாததையும் மன்னித்துப் பார் உலகில் நீயே மாமனிதன்.
கோவை மனம் 88. எளிமையான
மனிதருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்போது உணர்ச்சி வசப்படுபவரே சிறந்த மனிதர்.
கோவை மனம் 89. தொடர்ந்து
வெற்றி பெற்றாலும் உன்னை வீழ்த்த, நீ வீழ்த்தியவனே உனக்கு
எமனாக வருவான்.
கோவை மனம் 90. வேண்டியதெல்லாம்
கிடைக்கும் இடத்தில் நீ இருக்கும்போது வேண்டாமல் இருப்பவன் முட்டாள். அதேசமயம்
வேண்டுவதெல்லாம் கிடைக்கிறதே என்று தேவையற்றவற்றையும் பெறுபவன் அடிமுட்டாள்.
கோவை மனம் 91. அழகாய்த் தெரிவதெல்லாம் அழகல்ல. ஒப்பனை,
அழகில்லாததையும் அழகாக்கிக் காட்டும்.
கோவை மனம் 92. போலி அழகில் நெஞ்சைச் செலுத்தாதே. வாழ்க்கை
பொய்யாகிவிடும்.
கோவை மனம் 93. தொட்டில் பழக்கம் அதிகப் பணம் சேரும் வரையே.
கோவை மனம் 94. கடந்த காலங்கள் தனதானதாக இருந்தாலும் நிகழ்காலமும்
எதிர்காலமும் தனதில்லை என்றாகலாம். கவனமுடன் காலத்தோடு ஒத்து வாழப்பழகு.
கோவை மனம் 95. வயதைப் பொறுத்து
அமைவது அல்ல முதுமை. உணர்ச்சியையும், செயற்பாட்டையும், உள்ளத் தெளிவையும் கொண்டதே முதுமையின்
அளவுகோல்.
கோவை மனம் 96. இயல்பான வாழ்க்கையைத் திரையில் காட்ட வேண்டும்
என்றால் நடிக்கத்தான் வேண்டும். நடிப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு உரியவர்கள்
அல்ல.
கோவை மனம் 97. கணவன் நினைப்பதை மனைவியும், மனைவி நினைப்பதை கணவனும் உணர்ந்து செயற்பட்டால், உலகில்
அவர்களே சிறந்த வாழ்விணையர்.
கோவை மனம் 98. குழு ஆட்டத்தில் வெற்றி-தோல்வி யாருக்கும்
நிரந்தரமில்லை. ஆட்டத்தில் தோற்றதற்காக தலைமை ஏற்றவர் மட்டும் பொறுப்பாகமாட்டார்.
தானே பொறுப்பேற்று விலகுவதும் விவேகமல்ல. எந்த சூழலையும் எதிர்கொள்பவனே
தலைமைக்குரியவன்.
கோவை
மனம் 99. பணத்தை நேசிப்பவன் உறவை வெறுப்பான்.
கருத்துகள்
கருத்துரையிடுக