கோவை மனம் (51-75)
கோவை மனம் 51. பொருளியல் இல்லாத வாழ்வியல் கசக்கும்.
கோவை மனம் 52. உனக்கு
அது இல்லை என்று உறுதியாகத் தெரிந்திருந்தும் அதைப்பெறுவதற்கு முயற்சிப்பது வீண்.
கோவை மனம் 53. செல்வத்தைச் சொத்தாகத் தருவதைவிட
தொழிலைத் தன் மக்களுக்குச் சொல்லித் தருபவரே சிறந்த தந்தை.
கோவை மனம் 54. ஆழ்ந்த அன்பு ஒருவரிடம்
வெளிப்பட்டால் அவரிடம் உண்மையைக் காணலாம்.
கோவை மனம் 55. போக வேண்டிய இடத்திற்கான
பாதை கரடு முரடான பாதையாக இருந்தாலும் எச்சரிக்கையாக நடந்தால் போக வேண்டிய இடத்தை உறுதியாக
அடையலாம்.
கோவை மனம் 56. வளர்த்தவனை
மறப்பதும் மறைப்பதும் வளர்பவனுக்கு அழகல்ல.
கோவை மனம் 57. நிறை
குடத்தில் மேலும் திணிப்பதால் விளையப்போவது ஒன்றுமில்லை.
கோவை மனம் 58. காத்திருப்பதிலும்
சுகம் இருப்பதை நீ உணர்ந்தால் காத்திருப்பதால் தவறில்லை.
கோவை மனம் 59. நல்லதொரு
வடிவத்தைச் செதுக்கும் போது சேதாரம் தவிர்க்க முடியாதது.
கோவை மனம் 60. அழுக்கைக்
களைவதை விட அழுக்கு ஆகாமல் பார்த்துக் கொள்பவனே புத்திசாலி.
கோவை மனம் 61. தன்னைவிடச்
சிறந்தவன் எவனுமில்லை என்று நினைப்பவனைவிட தனக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்று
நினைப்பவனே தவறுகள் செய்ய அச்சப்படுவான்.
கோவை மனம் 62. உன்னுடைய
கஷ்ட காலத்தில் உன்னுடைய உறவுகள் உன்னுடன் இருப்பதைவிட உன்னை எதிரியாகப்
பார்த்தவன் உன்னுடன் இருந்தால் என்றால் நீ சரியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்
என்று உணர்ந்துக்கொள்.
கோவை மனம் 63. பதவியில் நீ இருக்கும்போது கூடுதலாக பல பதவிகள் உன்னை வந்து சேர்ந்திருந்தால் உன்னுடைய பதவிக் காலத்திற்குப் பிறகு நீ பலருக்குப் பதவிகள் கொடுக்கும் நேரம் வரும்.
கோவை மனம் 64. நல்ல அறிவு கிடைக்கும் இடம்
எதுவாக இருந்தாலும், எங்கிருந்தாலும், எவ்விடத்திருந்தாலும் நாடிச் சென்று பெறுவதே
சிறந்த அறிவாளிக்கு அழகு.
கோவை மனம் 65. நீ
தலைவனாக இருக்கும் இடத்தில் உன் பின்னால் உன் தொண்டர்கள் அணி வகுப்பர். அதே சமயம்
உன் தலைவன் பின்னால் நீ அணி வகுக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டால்
எதிர்காலத்தில் நீயே சிறந்த தலைவனாக உருவெடுப்பாய்.
கோவை மனம் 66. கடல்மீன்
குளத்தில் வாழாததுபோல் வசதியாக வாழ்ந்தவனால் கஷ்டத்தில் வாழ முடியாது.
கோவை மனம் 67. கொதிக்கும் நீருக்குத் தெரியும் இறக்கி வைத்ததும் ஆறிவிடுவோம் என்று. ஆனால், ஆறிய பிறகு தண்ணீரின் குணம் தனக்கில்லை என்று ஒத்துக்கொள்ளாததுபோல் இருக்கும் மனிதர்களால் பயனேதுமில்லை.
கோவை மனம் 68. உன்னால்
இதைச் செய்ய முடியும் என்பதைச் செய்வதைவிட, செய்யவே முடியாது
என்பதைச் செய்து காட்டுபவனே உயர்ந்தவன்.
கோவை
மனம் 69. பிறரைப் பற்றிப் பேசுபவன், தன்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவதோடு தன் இயலாமையை
வெளிப்படுத்தி இழிவுபடுத்திக் கொள்கின்றான்.
கோவை மனம் 70. மலையின் உச்சி சிறப்பானதாக
இருந்தாலும் மலையின் அடிவாரம் அதைவிட முக்கியமானதாகும்.
கோவை மனம் 71. எல்லோரிடமும்
நல்ல பெயர் எடுத்தவனைக் கெட்டவனாக்குவது எளிது. ஆனால், எல்லோரிடமும்
கெட்ட பெயர் எடுத்தவனை நல்லவனாக்குவது எளிமையல்ல.
கோவை மனம் 72. தனக்கு
நஷ்டம் ஏற்பட்டபோது வருந்தியதைவிட பிறருக்கு நஷ்டம் ஏற்பட்டதை அறிந்து வருந்துபவனே
வாழ்க்கையில் விரைவாக முன்னேறுவான்.
கோவை மனம் 73. பருவத்தே
நட்ட பயிர் நல்ல விளைச்சலைத் தந்தாலும் பதர் தவிர்க்க முடியாதது என்பதை நினைவில்
கொள்.
கோவை மனம் 74. இலாபம்,
முதலீடு பொருத்தல்ல உழைப்பைப் பொருத்ததே ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக