கோவை மனம் (251-275)
கோவை மனம் 251. தன்னால் செய்ய முடியாததைப் பிறர் செய்யும் போது அவர் மீது வெறுப்பு வருவது இயல்பு. இது அவரால் எப்படி முடிந்தது என்று விடை காண்பது அறிவு.
கோவை மனம் 252. மனைவியிடம் காமம் கொள்ளாதே.
கோவை மனம் 253. இருவர்க்கிடையே ஒத்த அன்பு நிலவினால் குடும்பம்
முன்னேறும். அதே அன்பு ஒரு குழுவினரிடேயே நிலவினால்
நாடே முன்னேறும்.
கோவை மனம் 254. நம்பிக்கை அளவுக்கு மீறும்போது அழிவும் கேலியும்
எதிரே நிற்கும். இதனை எதிர்த்து வெல்பவனே அறிவாளி.
கோவை மனம் 255. ஊசி நுழையாத இடத்திலும் காற்று நுழையும் என்பதை
உணர்ந்து வீண் பேச்சைத் தவிர்.
கோவை மனம் 256. நூல் நுழைய ஊசி இடம் கொடுத்ததால் ஊசியைக் கேவலப்படுத்தாதே. அதுவே இடம்கொடுக்க மறுக்கும்போது நீ அசிங்கப்பட்டு
நிற்பாய்.
கோவை மனம் 257. கொடுத்துப் பார் சுகம் தெரியும். எடுத்துப் பார் வலி புரியும்.
கோவை மனம் 258. வாழ்ந்தவர்களின் முடிவுரையே வாழ்பவர்களுக்கு
முன்னுரை.
கோவை மனம் 259. கோடி கொடுத்தாலும் கொடி பிடிக்காதவன் உயர்ந்தவன்.
கோவை மனம் 260. மாற்றத்தை நினைப்பவன், தொடக்கத்தில் சோதனைகளைச்
சந்தித்துப் பின்னர் சாதனை புரிவான்.
கோவை மனம் 261. கள்வன்
களவாடிப் பெற்றதை வல்லவன் ஒருபோதும் மீளப் பெறமாட்டான். ஆனால், இனி ஏமாறாமல் இருக்கவும், கள்வன் பெற்றதைப்போல்
பல மடங்கு உயர்வானதைப் பெறவும் முயற்சி செய்வான்.
கோவை மனம் 262. வானம்
நிலவை மறைப்பதில்லை. ஆனால், மேகம் நிலவை மறைக்கின்றது. வானம் நிலையானது, மேகமோ நிலையற்றது.
கோவை மனம் 263. தொடர்ந்து
இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இனிப்பும் ஒருநாள் கசக்கும். எனவே, சுவையில் இனிப்பும் காரமும் மாறிமாறி இருத்தல்
வேண்டும். அதுபோலத்தான், வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி அமைதல் வேண்டும்.
கோவை
மனம் 264. இன்ப துன்பங்களின் அளவுகோலை வைத்தே அவனுடைய வாழ்க்கை அமையும்.
கோவை மனம் 265. இழப்பின் விலையே அறிவுக்
கொள்முதல்.
கோவை
மனம் 266. உலகம் உன்னை ஏசினாலும் உன்னை நீ ஏசாமல் பார்த்துக்கொள்.
கோவை மனம் 267. உன்னைப்
பழிப்பவர்கள் நிச்சயம் ஒருநாள் பழிக்கப்படுவார்கள்.
கோவை
மனம் 268. உணர்ச்சியில் வாழ்பவர்கள் கற்பனையில்தான் வாழ வேண்டும்.
கோவை மனம் 269. மென்மையான
இதயம் எங்கிருக்கிறதோ அங்கே அமைதி இருக்கும், அழகு இருக்கும், இரக்கம் இருக்கும், நல்ல
குணம் இருக்கும்.
கோவை மனம் 270. சொந்தங்கள்
ஆயிரம் இருந்தாலும் சொத்து இல்லை என்றால் அவனே இவ்வுலகில் அனாதை.
கோவை மனம் 271. இலக்கை எட்டிய மனம் அமைதியடையாமல் வேட்கை கொள்ள
வேண்டும்.
கோவை மனம் 272. உணர்ச்சியற்ற உடலும், உணர்வற்ற மனமும் பாழ்.
கோவை மணம் 273. ஒத்த மன இணைவு சிறக்கும்.
கோவை மனம் 274. காலத்தே நடை பழகு, காலமும் உடல் சிறக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக