கோவை மனம் (151-175)
கோவை மனம் 151. பொருள் இல்லார்க்குச் சுற்றமும் உறவும் இருந்தும் இல்லாததாகவே இருக்கும்.
கோவை மனம் 152.
பொருள் மட்டும் வாழ்க்கையில் முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்.
கோவை மனம் 153.
சேர்த்த பொருள் ஒருநாள் பொன்னம்பலம் ஏறும்.
கோவை மனம் 154.
பொருள் என்பது போகப் பொருள்.
கோவை மனம் 155.
நிலையற்ற போகத்தில் மனதைச் செலுத்தி பொருளை இழப்பதால் நித்திரையும்
வாழ்க்கையும் கெடும்.
கோவை மனம் 156.
ஆறு சுருங்க ஊறு விளையும்.
கோவை மனம் 157.
ஏரிக்குள்ளேயும் கீழேயும் அமையும் ஊர் என்றும் பாழ்.
கோவை மனம் 158.
வளமான ஊரானாலும் வடிகால் அவசியம்.
கோவை மனம் 159.
வளமான குரல் இருந்தாலும் அதில் நலமான குரல் ஒலி (பேச்சு) வேண்டும்.
கோவை மனம் 160.
என்றோ வரும் வெள்ளத்திற்கு என்றும் இடம் விட்டுவைக்க வேண்டும்.
கோவை மனம் 161.
நோய்க்குப் புற மருந்து உடனடி தீர்வாகலாம். ஆனால், நோய் வரும் பாதையை உணர்ந்து அடைத்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கோவை மனம் 162.
உன் செயல்களைக் கண்ணுக்குத் தெரியாத ஒருவன் பார்த்துக்
கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே குற்றம் புரிவதைத் தடுக்கும்.
கோவை மனம் 163.
காமக் கண்ணும் போகப் பொருளும் சோகம் கொடுக்கும்.
கோவை மனம் 164.
காமம் களை, மனம் அமைதி கொள்ளும்.
கோவை மனம் 165.
தலை வணங்கி மாலை ஏற்ற உன்னத மாமனிதனின் சிலைக்குத் தூக்கி வீசி மாலை
அணிவிக்கும் எதிர்கால மாமனிதர்கள்.
கோவை மனம் 166.
நல்லோரை நண்பனாகவும், வல்லோரை குருவாகவும்
கொள்.
கோவை மனம் 167.
தீயோரை ஒரு பொழுதும் மதியாதே.
கோவை மனம் 168.
ஆசை கொண்டோன் வாழ்வை இழப்பான். பேராசை கொண்டோன் உலகையே துறப்பான்.
கோவை மனம் 169.
அத்தியாவசியத் தேவைக்கு ஆசைப்படு. ஆடம்பரத்திற்கு ஆசைபடாதே.
கோவை மனம் 170.
அளவுக்கு மீறிய ஆசை ஆளையே கொள்ளும்.
கோவை மனம் 171.
பலனை எதிர்பார்த்துச் செய்யும் எந்த உதவியும் சபை ஏறாது.
கோவை மனம் 172.
மனமும் உடலும் சோர்வடைந்திருக்கும் போது தினப் பணியில் இருந்து ஓய்வு
கொடு. ஓய்வே இவைகளுக்குச் சிறந்த மருந்து.
கோவை மனம் 173.
தண்டனை பெற்ற குற்றவாளியை எண்ணிப் பார் குற்றம் புரிவது குறையும்.
குற்றம் குறையக் குறைய உன்னை நீ பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறாய் என்பதை உணர்.
கோவை மனம் 174.
அழுவது உடலுக்கு நன்மை. பேரழுகை தீங்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக