கோவை மனம் (126-150)
கோவை மனம் 126. பேராபத்துக் காலத்தில் அஞ்சாதவன் முரடன், அஞ்சுபவன் மனிதன்.
கோவை மனம் 127. கொடைஞனுக்குக் கோடி பணம் கொடுத்தாலும்
கொப்பியில் வைக்கமாட்டான்.
கோவை மனம் 128. உள்ளம் கட்டுப்பட்டால் நோய் கட்டுக்குள்
இருக்கும்.
கோவை மனம் 129. மனமும் குணமும் வெந்தால்
நிம்மதி அறும்.
கோவை மனம் 130. எந்த வகையிலும் எவருக்கும் உதவி செய்யாதவன் எதற்கும் உதவான்.
கோவை மனம் 131. பற்றாக்குறைதான் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.
கோவை மனம் 132. உள்ளத்தில் வேதனையும் உடலில் வலியும் ஒருசேரக் கொண்டவன் நோயாளி.
கோவை மனம் 133. மருத்துவமும் மருந்தும் துன்பம் தருமாயினும் பின்னாளில் இன்பம் தருமாயின்
ஏற்க.
கோவை மனம் 134. ஒருவனின் உணர்ச்சிகளினால் பிறருக்கு ஏற்படும் நன்மை தீமைகளைக் கொண்டே
அவனின் வாழ்க்கை அளவிடப்படுகிறது.
கோவை மனம் 135. நல்ல தூக்கமே இன்பத்திற்கு விடை.
கோவை மனம் 136. நாம் வாழும் மண்ணைப் பொருத்தே நோயும் மருந்தும் அமையும்.
கோவை மனம் 137.
கேடு நினைப்பவன் தானாகக் கெடுவான்.
கோவை மனம் 138.
பிறரின் துன்பத்தைத் தனதாக்கிப் பார், உன்
துன்பம் தானாய் மறையும்.
கோவை மனம் 139.
இன்றைய சோதனை நாளைய சாதனை.
கோவை மனம் 140.
பணத்தை விரும்புபவன் பணத்தைத் தேடுகிறான். நல்மனதை விரும்புபவன்
மனிதனைத் தேடுகிறான்.
கோவை மனம் 141.
உள்ளம் நினைப்பதை நாக்கு பேசும் போது அதில் உண்மை மட்டுமே
இருக்கும். அது மாறினால் பொய் இருக்கும். அவன் பார்வையே இதன் அளவுகோல்.
கோவை மனம் 142.
பிறருக்குக் கேடு நினைப்பவன் தானே கெடுவான்.
கோவை மனம் 143.
துன்பத்தில் உதவாத உறவும், இன்பத்தில் வரலாத
சுற்றமும் கேடு.
கோவை மனம் 144.
உலகப் பற்று குறையக் குறைய மனதில் அமைதி வளரும்.
கோவை மனம் 145.
சோம்பலினால் உடலும் மனமும் கெடும்.
கோவை மனம் 146.
இயக்கம் இல்லாத பொருள் பாழ்.
கோவை மனம் 147.
போக வாழ்க்கை பாழ்.
கோவை மனம் 148.
தூய்மை இல்லாத துறவு பாழ்.
கோவை மனம் 149.
கேட்காத கடனும் பேசாத உறவும் வீண்.
கருத்துகள்
கருத்துரையிடுக